தனுசு
நிம்மதியான வாரம். பாக்கிய ஸ்தான அதிபதி சூரியன் ராசிக்கு ஐந்தில் உச்சம் பெறுகிறார். தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் நடைபெறும்.தெய்வப் பிரார்த்த னைகள் நிறைவேறும். பூர்வீகத்திற்கும் குல தெய்வ கோவிலுக்கும் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும். தொழிலில் முதலீடுகள் பல மடங்கு லாபத்தைத் தரும்.
குரு தன் வீட்டை தானே பார்ப்பதால் செய்யாத குற்றத்தினால் அனுபவித்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். கடன் கார ணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள். மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். திருமண முயற்சி கைகூடும். குரு அஷ்டம ஸ்தானத்தை நோக்கி நகர்வதால் முக்கியப் பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும். தமிழ் புத்தாண்டு அன்று சக்கரை பொங்கல் தானம் வழங்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406