ராசிபலன்

விருச்சிகம்- வார ராசிபலன் 12.4.2026 முதல் 18.4.2026 வரை

அதிர்ஷ்டம் சற்று குறையும்.

விருச்சிகம்

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். தொழில் ஸ்தான அதிபதி சூரியன் ராசிக்கு 6ம் இடத்தில் உச்சம் பெறுகிறார்.மனதின் வேகத் திற்கு ஏற்றவாறு செயல்களில் வேகம் இருக்காது.தேவையற்ற யோசனைகளால் கவலைகள் அதிகமாகும்.பு தியதாக சுய தொழில் துவங்கு பவர்கள் முதலீடு அதிகம் இல்லாத சுய தொழில் செய்யலாம். அஷ்டமாதிபதி புதன் நீச்சபங்க ராஜயோகம் பெறுவதால் விபத்து கண்டம், சர்ஜரி, அவமானம் சார்ந்த பாதிப்புகள் வரலாம். அதிர்ஷ்டம் சற்று குறையும்.

மாணவர்கள் காலத்தின் அருமை உணர்ந்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று படிப்பில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவார்கள். எதிர்கட்சியினருக்கு சாதகமான காலம். பதவியை தக்க வைக்க ஊர் ஊராக அலைந்து விரயம் அதிகமாகும். சிலர் விரயம் என்றால் பொருள் விரயம் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். கவுரவம் குறைந்தாலும் விரயம் தான். அசையாச் சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திரங்களை சரிபார்ப்பது நல்லது.சரியான நேரத்திற்கு உணவு அருந்தவும். தமிழ் புத்தாண்டு அன்று இனிப்பு தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406