ராசிபலன்

துலாம்- வார ராசிபலன் 12.4.2026 முதல் 18.4.2026 வரை

பிள்ளைகளின் நடவடிக்கைகள் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

துலாம்

நினைத்த காரியங்கள் கை கூடிவரும் வாரம். ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் நினைத்த அனைத்து செயல்களும் சித்தியாகும். எதையும் வரும் முன் அறிந்து செயல்படுவீர்கள். தொழில் தொடர்பான ஆலோசனை வழங்குவதில் மதி மந்திரியாக திகழ்வீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை மாற்றம் கிடைக்கும். திருமணத்திற்கு நல்ல வரம் அமையும். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றி தீர்மானிப்பதில் குழப்பம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய கடன் மற்றும் கொடுக்கல், வாங்கல் தொடர்பான விசயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சிலருக்கு புதிய வீடு கட்டும் ஆர்வம் உதயமாகும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளுடன் மறைந்த தாய், தந்தையின் சொத்தைப் பிரிப்பதில் மனக் கசப்பு உருவாகும். சக பணியாளர்களிடம் சகிப்புத் தன்மையுடன் பழக வேண்டும். ராசிக்கு குருப் பார்வை இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே கிடைக்கப் போகிறது என்பதால் முக்கிய பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. தமிழ் புத்தாண்டு அன்று மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT