ராசிபலன்

மீனம்- வார ராசிபலன் 12.4.2026 முதல் 18.4.2026 வரை

கடினமாக உழைப்பும் முயற்சியும் இருந்தால் இலக்கை, லட்சியத்தை அடைய முடியும்.

மீனம்

சுமாரன வாரம்.அஷ்டமாதிபதி சுக்கிரன் மற்றும் 6ம் அதிபதி சூரியன் ராசிக்கு 2ல் சேர்க்கை பெறுவதால் வெளிநாட்டு வருமானம் வரும் அல்லது வேற்று இனத்தவரின் உதவிகள் கிடைக்கும். தனவரவில் தடையில்லாத, தளர் வில்லாத வளர்ச்சி உண்டாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் இந்த வாரத்தில் கிடைத்துவிடும். ராசி அதிபதி குரு சாதகமாக இருப்பதால் அனைத்து இழப்புகளையும் ஈடு செய்யக் கூடிய நல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். கடினமாக உழைப்பும் முயற்சியும் இருந்தால் இலக்கை, லட்சியத்தை அடைய முடியும்.

தாராள தன வரவால் குடும்பத்தில் சல சலப்பு நீங்கி கலகலப்பு கூடும். திருணப் பேச்சு வார்தைகள் நல்ல முடி விற்கு வரும். சுகவீனத்தால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் நிர்வாகத்திற்கு முறையாகத் தெரியப்படுத்துங்கள். அலட்சியமாக இருந்து வேலையை இழந்து விடாதீர்கள். கடன் பெற்றாவது சொந்த வீடு, வாகன யோகத்தை அடைவீர்கள். பேச்சில் நிதானம் தேவை. தமிழ் புத்தாண்டு அன்று மஞ்சள் நிற உணவு தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406