ராசிபலன்

மேஷம்- வார ராசிபலன் 12.4.2026 முதல் 18.4.2026 வரை

தமிழ் புத்தாண்டு அன்று நீர்மோர் தானம் வழங்கவும்.

மேஷம்

சகாயமான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் ராசியில் உச்சம் பெறுகிறார்.எந்த ஒரு காரியத்திலும் துணிந்து செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். தனித்திறமைகள் வெளிப்படும். லவுகீக நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்தியாக இருக்கும்.குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கவுரவப் பதவிகள், இழந்த பதவிகள் கிடைக்கும். பூர்வீகம், குலதெய்வம், குழந்தை சார்ந்த செயல்களால் ஆதாயம் ஏற்படும்.

தொழிலில் லாபம் வருவதற்கு புதிய முயற்சிகளை, யுக்திகளை கடைபிடிப்பீர்கள். எதிரிகளை அடக்க முடியும் என்பதால் பொது வாழ்வில் இருப்பவர் களுக்கு மேன்மையான காலம். வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்வாதாரம் உயரும். அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை கூடும். வீடு, வாகனம் போன்றவைகள் மூலம் சுப விரயம் உண்டாகும். கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். தமிழ் புத்தாண்டு அன்று நீர்மோர் தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406