தேவைகள் பூர்த்தியாகும் வாரம். ராசிக்கு 2,7-ம் அதிபதி செவ்வாயின் சமசப்தம பார்வை உள்ளது. முக்கியமான செயல்களைத் தெளிவாக செய்வதன் மூலம் வாழ்வாதாரம் உயரும். மதிப்பு மிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.
கடன் விவகாரங்களில் அனுகூல நிலை ஏற்படும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும், பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.
இழந்த பதவி தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. இன்னும் சில நாட்களே ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் நன்மைகள் மேலும் கூடும். திருமண முயற்சியை துரிதப்படுத்த வேண்டும். வாழ்க்கை துணையின் வேலை நிரந்தரமாகும்.
தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது உங்கள் கடமையாகும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை, கூட்டு முயற்சியில் வெற்றி, நட்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாரிசு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தினமும் மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406