ராசிபலன்

ரிஷபம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை

வரவிற்கு எந்த குறையும் இருக்காது.

குதூகலமான வாரம். வார இறுதியில் ராசி அதிபதி தனஸ்தானத்தில் நிற்கும் குருவுடன் சேர்க்கை பெறுகிறார். சிந்தனைகள் பெருகும். இதுவரை சாதிக்க முடியாத பல காரியங்களை சாதித்து முடிப்பீர்கள். காரியத் தடை நீங்கி வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்புள்ளது. வியாபாரத்திற்கு தேவையான வங்கிக் கடன் அல்லது வீடு வாகனக் கடன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் விருத்தி, வழக்குகளில் வெற்றி ஆகியவை ஏற்படும்.திருமணத் தடை அகலும்.

புத்திரப் பேறு கிடைக்கும். புதிய எதிர்பாலின நட்பு மனதில் குதூகலத்தை அதிகரிக்கும். வரவிற்கு எந்த குறையும் இருக்காது. கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.

சிலர் இது வரை ஒத்தி வைத்த கண் அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனை செல்ல நேரும். படித்து முடித்தவர்களுக்கு உடனே வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வரும். வெள்ளிக்கிழமை சர்க்கரை பொங்கல் படைத்து மகாலட்சுமியை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406