ராசிபலன்

கும்பம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை

சிலர் உபரி பணத்தை புதிய சொத்துக்களில் முதலீடு செய்வார்கள்.

நன்மையும் தீமையும் கலந்த வாரம். தன லாப அதிபதி குரு ராசியில் உள்ள ராகுவை பார்ப்பதால் தொழிலில் வெற்றியும், முன்னேற்றமும் உண்டாகும். சதா சர்வ காலமும் குடும்பம், தொழில் பற்றி சிந்திப்பதும் செயல்படுவதுமாகவே இருப்பீர்கள்.

முயற்சியில் வெற்றியை காண்பது மட்டுமே உங்கள் லட்சியமாக இருக்கும். உயர் கல்வி முயற்சி கை கூடும். வெளிநாட்டு வேலை முயற்சி பலன்தரும். பொருளாதார நெருக்கடி குறையும். பெண்களுக்கு தாய், தந்தை வழி உறவுகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சிலர் உபரி பணத்தை புதிய சொத்துக்களில் முதலீடு செய்வார்கள். சிலருக்கு மனைவி மூலம் சொத்துகள் கிடைக்கும். அடமான சொத்துக்கள் மீட்க தேவையான நிதி உதவி கிடைக்கும்.

பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். பெண்களுக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மகான்களின் தரிசனத்தால் ஞான வழியில் மனம் சென்று அமைதியாகும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT