ராசிபலன்

மேஷம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை

திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.

லட்சியத்தை அடையும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார். கடந்த காலம் பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். குணமேன்மை, செயல்திறன் ஆகியவற்றின் மூலம் வாழ்வாதாரம் உயரும்.

தற்போது விரயச்சனி நடப்பதாலும் சுக ஸ்தானத்தை குரு நெருங்குவதாலும் எதையும் யோசிக்காமல் சொத்து வாங்கிப் போடுவது உத்தமம். நிலைமை சீராகும் போது கடன் தானாக அடைபட்டு விடும்.

அலைச்சலும், அசதியுமான உள்ளுர், வெளியூர், வெளிநாட்டு தொழில் பயணங்கள் உண்டாகும். பிரயாணங்களால் ஆதாயம் உண்டு. முன்னோர்களின் பரம்பரை வியாதியான சுகர், பிரஷர் போன்றவற்றிற்கு மாற்று மருத்துவம் நல்ல பலன் தரும். கணவன் மனைவி உறவில் தோன்றிய விரிசல் மறையும்.

திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். குடும்ப விழாக்கள் மற்றும் விருந்துகளில் கலந்து கொள்வதால் மனம் சந்தோஷமும் நிம்மதியும் அடையும். செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாழைப்பழம் படைத்து முருகனை வழிபடுவதால் நினைத்தது கைகூடும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406