இழந்த இன்பங்களை மீட்டுப் பெறும் வாரம். லாப ஸ்தானத்தில் குரு பகவான் நுழையப் போவதால் இழந்த இன்பங்களை மீட்டுத் தரப் போகிறார். இதுவரை சிறிய தொழில் செய்தவர்கள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். கோட்சார சனி பகவான் உங்கள் திட்டம் மற்றும் முயற்சியில் வெற்றி பெற உதவி செய்வார். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கலாம்.
சிலருக்கு சுய விருப்ப விவாகம் நிறைவேறும். மாணவர்கள் அரியர்ஸ் பாடத்தை மீண்டும் எழுதி பாஸ் பண்ணும் சந்தர்ப்பம் கிடைக்கும். திருமணத்தடைகள் விலகும். பிள்ளைகளுக்காக தங்கம் போன்ற சுப மங்களப் பொருட்கள் வாங்குவீர்கள். மருமகள், மருமகன் பூர்வீகச் சொத்து பிரிவினையில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சிலர் பூர்வீகச் சொத்தை மீட்க கடன் பெறலாம். ஆதரவில்லாத குழந்தைகளின் கல்விக்கு உதவவும்.