ராசிபலன்

சிம்மம் - வார ராசிபலன் 17.5.2026 முதல் 23.5.2026 வரை

குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலைப்பளு கூடும்.

புதிய முயற்சிகளில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது தொழில் தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். எனினும் சில நாட்களில் விரய ஸ்தானத்தில் குரு பகவான் உச்சமடைவதால் சுய ஜாதக ரீதியான சாதகம் பாதகம் அறிந்து தொழிலில் செயல்படுவது நல்லது. புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை.

தம்பதிகள் தொழில் உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். என்றைக்கோ வாங்கிப் போட்ட சொத்தை அவசிய தேவைக்காக விற்கலாம். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதுவும் செய்யாமல் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. முன் கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையுடன் செயல்பட வேண்டும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலைப்பளு கூடும். ஆரோக்கிய தொல்லைகள் குறைய துவங்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

SCROLL FOR NEXT