ராசிபலன்

கடகம் - வார ராசிபலன் 17.5.2026 முதல் 23.5.2026 வரை

ராசிக்கு எட்டாமிடத்தில் ராகு நிற்பதால் திருமணம் முயற்சியில் கவனம் தேவை. சிலர் வேலை இழப்பால் பூர்வீகம் திரும்பலாம்.

தடைபட்ட அனைத்து செயல்களும் சித்தியாகும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் புதனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இது புத ஆதித்ய யோகா அமைப்பாகும்.

உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் உண்டு. தொட்டது துலங்கும். அரசாங்க வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணைக்கு பதவி உயர்வு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.

ராசிக்கு எட்டாமிடத்தில் ராகு நிற்பதால் திருமணம் முயற்சியில் கவனம் தேவை. சிலர் வேலை இழப்பால் பூர்வீகம் திரும்பலாம். பெண்கள் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய ஆபரணங்கள் வாங்குவதால் சுப விரயங்கள் அதிகமாகும். திங்கட்கிழமை அந்தணர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406