புதிய முயற்சிகளில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது தொழில் தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். எனினும் சில நாட்களில் விரய ஸ்தானத்தில் குரு பகவான் உச்சமடைவதால் சுய ஜாதக ரீதியான சாதகம் பாதகம் அறிந்து தொழிலில் செயல்படுவது நல்லது. புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. தம்பதிகள் தொழில் உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம்.
என்றைக்கோ வாங்கிப் போட்ட சொத்தை அவசிய தேவைக்காக விற்கலாம். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதுவும் செய்யாமல் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. முன் கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையுடன் செயல்பட வேண்டும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலைப்பளு கூடும். ஆரோக்கிய தொல்லைகள் குறைய துவங்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கவும்.
இழந்த இன்பங்களை மீட்டுப் பெறும் வாரம். லாப ஸ்தானத்தில் குரு பகவான் நுழையப் போவதால் இழந்த இன்பங்களை மீட்டுத் தரப் போகிறார். இதுவரை சிறிய தொழில் செய்தவர்கள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். கோட்சார சனி பகவான் உங்கள் திட்டம் மற்றும் முயற்சியில் வெற்றி பெற உதவி செய்வார். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கலாம்.
சிலருக்கு சுய விருப்ப விவாகம் நிறைவேறும். மாணவர்கள் அரியர்ஸ் பாடத்தை மீண்டும் எழுதி பாஸ் பண்ணும் சந்தர்ப்பம் கிடைக்கும்.திருமணத்தடைகள் விலகும். பிள்ளைகளுக்காக தங்கம் போன்ற சுப மங்களப் பொருட்கள் வாங்குவீர்கள். மருமகள், மருமகன் பூர்வீகச் சொத்து பிரிவினையில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சிலர் பூர்வீகச் சொத்தை மீட்க கடன் பெறலாம். ஆதரவில்லாத குழந்தைகளின் கல்விக்கு உதவவும்.
தன பிராப்தம் உண்டாகும் வாரம். குருப் பெயர்ச்சிக்குப் பிறகு தன ஸ்தானத்தில் குருப் பார்வை பதிவதால் பொருளாதார மேன்மை உண்டாகும். இதுவரை ராசிக்கு கவசமாக சாதகமாக இருந்த குருப் பார்வை தற்போது இல்லை என்பதால் சிந்திக்கும் திறன் குறையும். அவசரமின்றி நிதானமாக செயல்படவும். பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது. சிலர் பணியிலிருந்து ஓய்வு பெறலாம். திருமணத் தடை அகலும். மனக்கசப்பில் பிரிந்த குடும்பங்கள் ஒன்றிணையும். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும்.
பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். சிலர் வயது மூப்பு காரணமாக தனிமையில் ஓய்வு எடுக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 18.5.2026 அன்று இரவு 10.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடன் பிறந்தவர் களுடன் சொத்துக்கள் தொடர்பான பேச்சு வார்த்தையை தவிர்க்கவும். சில பெண்களுக்கு வரன் அமைவதில் தடைகள் உருவாகலாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. விநாயகர் வழிபட்டால் இன்னல்களை தவிர்க்க முடியும்.
புதிய சந்தர்ப்பங்கள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுவதால் எதிர்காலம் பற்றிய அனைத்து நம்பிக்கைகளும் நிறைவேறும். உங்களின் திறமைகளை வெளிக்காட்ட அரிய சந்தர்ப்பம் கிடைக்கும். உங்களை வம்பில் மாட்டிய எதிரிகள் இருந்த இடம் தெரியாது. தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். செல்வ செழிப்பு மன மகிழ்ச்சி அதிகரிக்கும். விவசாய நிலத்திற்கு புதிய குத்தகைதாரர்கள் ஒப்பந்ததாரர்கள், கிடைப்பார்கள்.
பெண்களின் சுய தொழில் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட துன்பம் அகலும். சில சமூக ஆர்வலர்களுக்கு அரச கவுரவம் கிடைக்கும்.தொழில், உத்தியோக போட்டிகளை சமாளிக்க முடியும். 18.5.2026 அன்று இரவு 10.05 மணி முதல் 20.5.2026 அன்று இரவு 10.39 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை குறையும். கடுமையான வாக்கு பிரயோகத்தால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படலாம். ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட நிம்மதி அதிகரிக்கும்.