ராசிபலன்

மகரம் - வார ராசிபலன் 17.5.2026 முதல் 23.5.2026 வரை

கடந்த கால நெருக்கடிகள் நீங்கும். சகோதர சகாயம் ஏற்படும். வாழ்க்கையில் திருப்திகரமான முன்னேற்றம் உண்டாகும்.

சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். அஷ்டமாதிபதி சூரியன் புதனுடன் இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆசைகளால் மனம் அலைபாயும். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம். புதிய தொழில் ஒப்பந்தம் மற்றும் முதலீடுகளை ஒத்தி வைக்கவும். சிலருக்கு பூர்வீக சொத்து சம்பந்தமான வில்லங்கம் வரும். சிலருக்கு சொத்து விற்பனையில் இழப்பு உண்டாகலாம். வீடு அல்லது அலுவலகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும். வெகு விரைவில் ராசிக்கு குரு பார்வை கிடைக்கப்போவதால் தலைக்கு வந்த பிரச்சனைகள் தலைப்பாகையோடு சென்று விடும்.

கடந்த கால நெருக்கடிகள் நீங்கும். சகோதர சகாயம் ஏற்படும். வாழ்க்கையில் திருப்திகரமான முன்னேற்றம் உண்டாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். அடமான நகை மற்றும் சொத்துக்களை மீட்டு மகிழ்வீர்கள். புதிய சொத்துக்கள், தங்க ஆபரண சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்த உரிய வைத்திய முறையை அணுக வேண்டும். வீர பத்திரரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

SCROLL FOR NEXT