ராசிபலன்

மேஷம் - வார ராசிபலன் 17.5.2026 முதல் 23.5.2026 வரை

அரசாங்க காரியங்களில் வெற்றி உண்டாகும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

முக்கிய தேவைகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார். ஆன்ம பலம் அதிகரிக்கும். நினைத்ததை நினைத்தபடியே செய்யக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். குடும்ப சுமைகள், பொறுப்புகள் குறையும். தேவைக்கு பணம் கிடைக்கும்.பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். பெற்றோர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்பு மறையும். வேலையில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். புத்திர பிராப்தம் சித்திக்கும். திருமண முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும். அரசாங்க காரியங்களில் வெற்றி உண்டாகும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சிலர் கடன் பெற்று புதிய சொத்துக்கள் வாங்கலாம். மாணவர்களுக்கு மறைந்து கிடந்த அனைத்து திறமைகளையும் வெளிகாட்ட நல்ல சந்தர்ப்பம் அமையும்.சிலருக்கு பெண்களால் தேவையற்ற மன உளைச்சல் உருவாகும். பிள்ளைகள் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்லலாம். ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406