கன்னி- வார ராசிபலன் 
கன்னி - வார பலன்கள்

கன்னி- வார ராசிபலன் 7.6.2026 முதல் 13.6.2026 வரை

சம்பள உயர்வு இடப்பெயர்ச்சிக்கு வாய்ப்புள்ளது.

கன்னி

இழுபறியாக இருந்த வேலைகள் முடியும் வாரம். ராசி அதிபதி புதன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்றுள்ளார். லாப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் சேர்க்கை உள்ளது.போதிய முதலீடு செய்து தொழிலை விரிவு செய்வீர்கள். வருமான பற்றாக்குறையை அகற்ற புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அரசு வழியில் உயர் பதவிகள் வகிக்கும் யோகம் உண்டாகும்.

சம்பள உயர்வு இடப்பெயர்ச்சிக்கு வாய்ப்புள்ளது. புதிய வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். தம்பதிகள் பிணக்குகள் நீங்கும். மனைவி வழி உறவுகளால் மதிக்கப்படுவீர்கள். 11.6.2026 அன்று காலை 8.16 முதல் 13.6.2026 அன்று காலை 9.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உறவினர்களுடன் வீண் விவாதத்தைத் தவிர்க்க வேண்டும். பிரதோஷ நாளன்று சிவபுராணம் படிக்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி,

செல்: 98652 20406