கன்னி - வார பலன்கள்

கன்னி - வார ராசிப்பலன் 31.5.2026 முதல் 6.6.2026 வரை

அடிப்படை வசதிகள் பெருகும்.

பாக்கிய பலன்கள் அடையும் வாரம். ராசி அதிபதி புதன் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் 2,9-ம் அதிபதி சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இது லட்சுமி நாராயண யோகமாகும். தோற்றத்தில் மிடுக்கும், செயலில் வேகமும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை நிலை உயரப் போகிறது. பிறந்த பலனை அடையப் போகிறீர்கள். வியாபாரத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகி லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள் பாராட்டப்படுவார்கள். அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க உகந்த காலம். உங்களின் புகழ், கவுரவம் உயரும். புதிய நட்புகள் கிடைக்கும். சுப நிகழச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அடிப்படை வசதிகள் பெருகும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். குழப்பங்கள் தீர்ந்து தெளிவான மனநிலை உண்டாகும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உங்களை வாட்டி வதைத்த நோய் தாக்கம் குறையும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். புதன்கிழமை கருட வழிபாடு செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

SCROLL FOR NEXT