கன்னி வார ராசிபலன் 
கன்னி - வார பலன்கள்

கன்னி- 2026 வார ராசிபலன் 5.7.2026 முதல் 11.7.2026 வரை

உங்களது கருத்துக்கு மாற்று கருத்துஉண்டாகலாம்.

கன்னி

விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம்.ராசி அதிபதி புதன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் வக்ரகதியில் விரயாதிபதி சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார்.வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் தடை தாமதம் ஏற்படும். மத நம்பிக்கை குறையும், மத மாற்ற சிந்தனை மேலோங்கும். தந்தை, தந்தை வழி உறவுகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.சுய ஜாதக தசா புத்தி அசுபத் தன்மையுடன் இயங்கினால் வீண் விரயங்கள் இழப்புகள் மருத்துவச் செலவுகள் வம்பு, வழக்கு, சிறை தண்டனை, விபத்து, கண்டம் அறுவை சிகிச்சை, தீராத கடன், தீர்க்க முடியாத நோய், கண் திருஷ்டி பாதிப்பு போன்ற அசுப பலன்கள் நடக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.8.7.2026 அன்று மாலை 4 மணி முதல் 10.7.2026 அன்று மாலை 6.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெண்கள் கணவரிடம் வீண் விவாதத்தை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை ஒத்தி வைக்கவும். உங்களது கருத்துக்கு மாற்று கருத்துஉண்டாகலாம். வெள்ளிக்கிழமை வீட்டில் நெய் தீபம் ஏற்றி லலிதா சகஸ்ஹர நாமம் படித்து வர பொருளாதார குற்றம் அகலும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406