கன்னி வார ராசிபலன் 
கன்னி - வார பலன்கள்

கன்னி- 2026 வார ராசிபலன் 28.6.2026 முதல் 4.7.2026 வரை

பொருளாதாரம் சீராக இருக்கும். வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு.

கன்னி

எண்ணற்ற புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி புதன் 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். செல்வாக்கு திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும். பொருளாதாரம் சீராக இருக்கும். வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு. வீடு, வாகன வசதிகள் மேம்படும். புதிய பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சிலர் வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்திப்பீர்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். சத்ருக்கள் தொல்லை அகலும். வேலைக்கு அடிக்கடி விடுப்பு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில்மேன்மை, காரிய சித்தி, முன்னேற்றம் போன்ற சுப பலன்கள் நடக்கும்.விரும்பிய அரசாங்க பணிக்கு சாதகமான சூழல் உள்ளது.உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். பெண் குழந்தைகளுக்கு காதணி விழா, பூப் புனித நீராட்டு விழா, போன்ற சுபச் செலவு ஏற்படலாம். பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு பெயர், புகழ் பரவும். பௌர்ணமி அன்று மகாவிஷ்ணு வழிபாடு செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT