கன்னி - வார பலன்கள்

கன்னி- 2026 வார ராசிபலன் 27.9.2026 முதல் 3.10.2026 வரை

உறவினர்கள் நண்பர்களுக்கு ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.

கன்னி

மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய வாரம். ராசியில் விரயாதிபதி சூரியன், சஞ்சரிக்கிறார். எனினும் ராசி அதிபதி புதன் தன ஸ்தான அதிபதி சுக்கிரனுடன் சேர்க்கை பெறுவதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். வசீகரமான தோற்றம் ஏற்படும். பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். தாய், தந்தைவழி தாத்தா மூலம் உங்களுக்கு நிதி உதவி கிடைக்கலாம். தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்களுக்கு ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் நிலுவை சம்பள வரவு மனதை மகிழ்விக்கும். 28.9.2026 அன்று காலை 10.16 முதல் 30.9.2026 பகல் 1.13 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சிக்கவும். தேவையற்ற கற்பனை, சிந்தனைகளை தவிர்க்கவும் மகாளய பட்ச காலத்தில் கன்னிப்பெண்களுக்கு இனிப்பு உணவு தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT