கன்னி - வார பலன்கள்

கன்னி- வார ராசிபலன் 24.5.2026 முதல் 30.5.2026 வரை

பூர்வீகச் சொத்துக்களை பெறுவதற்கான முன்னேற்பாடு செய்வீர்கள்.

கன்னி

முத்தாய்பான முன்னேற்றங்கள் உண்டாகும் சாதகமான வாரம். லாப ஸ்தானத்தில் நிற்கும் குருபகவானால் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும் புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயரும். சொத்து, மனை வாங்கும் போது மூலப் பத்திரங்களை பார்த்து வாங்குவது நல்லது.

பூர்வீகச் சொத்து

தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துக்களை பெறுவதற்கான முன்னேற்பாடு செய்வீர்கள். குடும்ப உறவில் இருந்த மன கசப்பு நீங்கும். அரசுத்துறை வேலைக்கு முயற்சிப்பீர்கள்.

திருமணம்

நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். பொருளாதா ரத்தில் திருப்தி உண்டாகும். திருமணம் சம்மந்தமான பேச்சு வார்த்தை நடக்கும். காதலர்கள் திருமணத்திற்கு ஆலோசனை செய்வார்கள். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள். வைகாசி விசாகத்தன்று வெண் பொங்கல் படைத்து முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406