கன்னி - வார பலன்கள்

கன்னி- 2026 வார ராசிபலன் 19.7.2026 முதல் 25.7.2026 வரை

தொழில் நிமித்தமான அலைச்சலான பயணங்கள் அதிகரிக்கும்.

கன்னி

கடுமையாக உழைக்க வேண்டிய வாரம். லாப ஸ்தானத்தில் நிற்கும் சூரியன் மற்றும் குருபகவானால் தொழிலில் வியாபாரம் பெருகும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படலாம்.புதிய சொத்துக்கள் சேரும். சிலருக்கு வாரிசு இல்லாச் சொத்து கிடைக்கும். சட்டரீதியான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். தொழில் தொடர்பானவர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்து, மனை வாங்கும் போது மூலப் பத்திரங்களை பார்த்து வாங்குவது நல்லது. தொழில் நிமித்தமான அலைச்சலான பயணங்கள் அதிகரிக்கும். கண் திருஷ்டி, செய்வினை, ஆரோக்கிய கேடு, வேலையின்மை போன்ற பாதிப்புகள் விலகும். கடன்களும், நோய்களும் குறைந்து ஆனந்தம் பெருகும். சிலர் புதிய வீடு கட்ட, வாகனம் வாங்க கடன் உதவி பெறலாம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் குல இஷ்ட தெய்வ வழிபாட்டால் விரும்பியதை அடைய முடியும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT