செயல்பாடுகள் மாறும் வாரம். ராசி அதிபதி புதன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பங்கு சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகள் குறையும். மன நிம்மதியும், முன்னேற்றமும் அதிகமாகும். தந்தையின் மூலம் பெரும் பணம், பொருள் கிடைக்கும். எதிரிகள் தொல்லை குறையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீட்டிற்கு செல்வார்கள். வாழ்க்கைத் துணைக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுப நிகழ்வுகள் நடக்கும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். எதிரிகளை வெல்லக்கூடிய வலிமை உருவாகும். கவுரவப் பதவிகள், பெயர், புகழ், சலுகைகள் என வெற்றிப் பாதையை நோக்கி முன்னேறுவீர்கள். ஆரோக்கிய குறைபாடு அகலும். புத்திர பாக்கியம் உண்டாகும். பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் ஒன்றாக இணைவார்கள். விவகாரத்து வரை சென்ற வழக்குகள் சாதகமாகும். சனிக்கிழமைகளில் கருட வழிபாடு செய்ய மன நிம்மதி கூடும்.