முத்தாய்பான முன்னேற்றம் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி புதன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பாதை தென்படும்.ஆன்ம பலம் பெருகும். மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான சாதகமான பலன்களும் நடக்கும். வேற்று இனத்தவரின் ஆதரவு கிடைக்கும்.பண வரவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் தொழிலில் சாதனை படைப்பார்கள். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம்.
வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை சுய ஜாதகப் பரிசீலனைக்குப் பிறகு செய்யவும். அரசாங்க வேலைக்கு அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். வீடு, வாகன யோகம் சிறப்பாக அமையும். சிலர் எழுதிய உயில், ஆவணங்களில் திருத்தம் செய்வார்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். இன்னல்கள் குறையும். புதன்கிழமை பாசி பருப்பு பாயாசம் தானம் வழங்கவும்.