கன்னி - வார பலன்கள்

கன்னி- 2026 வார ராசிபலன் 13.9.2026 முதல் 19.9.2026 வரை

விரயம் இருந்தாலும் வருமானம் வந்து கொண்டே இருக்கும்.

கன்னி

விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி புதனுக்கு சூரியன் மற்றும் சனியின் சம்பந்தம் உள்ளது. முக்கியமான பணிகளை பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க கூடாது. குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.தொழில் சீரான சிறப்பான முன்னேற்றம் உண்டு. பேச்சை மூலதனமாக கொண்ட தொழில், கமிஷன் அடிப்படையான தொழில் புரிபவர்களுக்கும் மிக மிக சாதகமான காலம். சிலருக்கு விபரீத அதிர்ஷ்ட யோகமான உயில் சொத்து அதிர்ஷ்ட பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. விரயம் இருந்தாலும் வருமானம் வந்து கொண்டே இருக்கும். எதிரிகளிடம் இருந்து வந்த போட்டி பொறாமைகள் மறையும். பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய சுப காரியம் நடக்கும். சில தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்து வாழலாம். தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வ வேண்டிய நேரம். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கைபராமரிப்புச் செலவு அதிகமாகும். ராசியை சனி பகவான் பார்ப்பதால் கண்டகச் சனியின் பாதிப்பால் சிறு சோர்வு, அசதி அலுப்பு அவ்வப்போது தோன்றி மறையும். மனசஞ்சலத்தை குறைக்க மகாவிஷ்ணுவை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT