கன்னி - வார பலன்கள்

கன்னி- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை

குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும்.

கன்னி

சாதகமான வாரம். 2,9ம் அதிபதி சுக்ரன் நீச்ச பங்க ராஜயோகம் பெறுகிறார். சிலருக்கு பரம்பரை கௌரவப் பதவிகள் அரசியல் யோகம் உண்டு. எதிரிகள் ஓடி ஒளிவார்கள். இதுவரை உங்களின் ஆலோசனைக்கு செவி சாய்க்காத குடும்பத்தினர் உங்களின் அருமை பெருமைகளை உணர்வார்கள். வரும் நாட்களில் குடும்ப பிரச்னைகள் அனைத்தும் நல்ல முறையில் தீரும். திருமணத் தடை அகன்று திருமணம் நடைபெறுவதற்கான உறுதி நிகழ்வுகள் நடைபெறும். சிலருக்கு பெற்றோர் வழியில் செலவுகள் வரும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எல்லாம் சரியாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும். ஒரு முக்கிய கோரிக்கைக்காக குல தெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பீர்கள். கவலைகள் விலகி இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப செளக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். தீபாவளி பண்டிகைக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT