கன்னி - தமிழ் மாத ஜோதிடம்

கன்னி- 2026 ஐப்பசி மாத ராசிபலன்

குருப்பெயரச்சியும் ராகு-கேது பெயர்ச்சியும் நன்மையை வழங்கும்.

கன்னி ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சுக்ரனோடும், சூரியனோடும் இணைந்து தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் புத சுக்ர யோகமும், புத ஆதிதிய போகமும் உருவாகின்றது. நீச்சபங்க ராஜயோகமும் ஏற்படுவதால் இந்த மாதம் ஒரு பொன்னான மாதமாகும். பொருளாதாரத்தில் உச்சநிலையை அடையும் மாதமாகவும் அமையப்போகின்றது. குருப்பெயர்ச்சியும். ராகு-கேது பெயர்ச்சியும் தன்மையை வழங்கும்.

சிம்ம - குருவின் ஆதிக்கம்

மாதத் தொடக்கத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 3-ந் தேதி (30.10.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் ராசிக்கு வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 4. 6. 8 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே அந்த இடங்கள் புனிதமடைந்து சிறப்பான பலன்களை வழங்கும். அந்த அடிப்படையில் 4-ம் இடத்தை குரு பார்ப்பதால் இடம், பூமியால் லாபம் கிடைக்கும் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். தாய்வழி ஆதரவு உண்டு, பழைய வாகனங்களைக் கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குருவின் பார்வை 6. 8 ஆகிய இடங்களில் பதிவதால் ஆரோக்கியத் தொல்லை அகலும், ரண சிகிச்சை செய்யாமல் சாதாரண சிகிச்சையிலேயே நோய்கள் குணமாகும். பிறர் நலன்கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும், சமுதாயத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க முயல்வீர்கள். பாகப்பிரியினை சாதகமாக அமையும். போட்டிக்கடை வைத்தோர் விலகுவர். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழி அகலும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய மனப்பயம் அகலும், 'உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே. வேறு இடம் மாறலாமா? என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது எதிர்பார்ந்த மாற்றம் வந்துசேரும்.

ராகு-கேது பெயர்ச்சி

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான். 13.11.2026 அன்று 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருகிறார். அங்கு அவர் ஒன்றரை ஆண்டு காலம் தங்கி இருக்கும் பொழுது பிள்ளைகளால் பெருமை சேரும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். திருமண முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலைமாறும், உத்தியோகத்தில் ஏற்படும் மாறுதல் திருப்தி தராது. மாறுதலாகி சென்ற இடம் மனதிற்கு பிடிக்காமல் மீண்டும் பழைய இடத்திற்கே வரும் சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் முன்னோர் கட்டி வைத்து சிதிலமடைந்த ஆல உங்களை மீண்டும் புதுப்பிக்கும் யோகம் உண்டு.

லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களின் ஆதரவோடு நல்ல காரியங்களைச் செய்வீர்கள், வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள், வெளிநாட்டு முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் சம்பள உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். ஆண்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஒப்பந்தங்கள் வரும் நேரம் இது.

வியாபாரம்

பொதுவாழ்வில் உள்ளவர்கள் புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பர். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பன உயர்வு பற்றிய தகனம் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மானை- மாணவிகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும், மதிப்பெண் அதிகம் பெற்று பாராட்டுக் குவியும். பெண்களுக்கு இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். வருமானம் போதுமானதாக இருக்கும்.

SCROLL FOR NEXT