ராசிபலன்

மேஷம்- 2026 வைகாசி மாத ராசிபலன்

ஆரோக்கியம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.

மேஷ ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். மேலும் சுகாதிபதி சந்திரனுடன் இணைந்து 'சந்திர மங்கள் யோக'த்தை உருவாக்குகிறார்.

இதனால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். தன ஸ்தானத்தில் புதன், சுக்ரன், சூரியன் சேர்க்கை பெற்றிருப்பதால் வருமானமும், வளர்ச்சியும் உயரும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

குடும்ப ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு எதிர்பார்த்தபடியே இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும்.

மிதுன - சுக்ரன்

வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், சகாய ஸ்தானத்திற்கு செல்வதால் எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பயணங்கள் பலன் தரும். பணியாட்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும், சகோதர உறவு பலப்படும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

மிதுன - புதன்

வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று, சொந்த வீடான மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். அது வெற்றிக்குரிய ஸ்தானம் என்பதால் தொட்டவை துலங்கும். வழக்குகள் இருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு.

உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வர். ஒருசிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவர். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தேக்க நிலை மாறும்.

கடக - சுக்ரன்

வைகாசி 26-ந் தேதி (9.6.2026) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். அங்கு குருவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகங்களின் சேர்க்கையால் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். ஏனென்றால் குரு உங்கள் ராசிக்கு தளாதிபதியாக விளங்குபவர். எனவே இந்த கிரக சேர்க்கையால் வருமானம் எவ்வளவு வந்தாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது, திடீர் மாற்றங்களை சந்திப்பீர்கள்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். செலவிற்கேற்ற வரவு வந்துசேரும்.

இம்மாதம் ஆனைமுகன் வழிபாடு ஆனந்தம் வழங்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.