ராசிபலன்

விருச்சிகம்- 2026 வைகாசி மாத ராசிபலன்

மனவே 'சந்திர மங்கள யோகம்' ஏற்படுகிறது.

விருச்சிக ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய். சொந்த வீடான மேஷத்தில் பாக்கியாதிபதி சந்திரனுடன் கூடி சஞ்சரிக்கிறார். எனவே 'சந்திர மங்கள யோகம்' ஏற்படுகிறது.

மேலும் சப்தம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் சூரியன் சஞ்சரிப்பதால் 'புத சுக்ர யோகமும். 'புத ஆதித்ய யோகமும் உண்டாகிறது. மே மாதம் 26-ந் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதியப்போகிறது.

குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப உச்சம் பெற்ற குருவின் பார்வையால் உன்னதமான பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். தொழில் முன்னேற்றம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். பாராட்டும், புகழும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

மிதுன-சுக்ரன்

வைகாரி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாமாவர் சுக்ரன்.

அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது, விபரீத ராஜ யோக அடிப்படையில் எதிர்பாராத விதத்தில் நல்ல பலன்கள் நடைபெறும். குறிப்பாக பயணங்களால் பலன் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

கல்யாண முயற்சிகள் கைகூடும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். வாழ்க்கை துணைக்கு வேலை கிடைத்து அதன்மூலம் உதிரி வருமானங்கள் வந்துசேரும். தொழில் வளர்ச்சி உண்டு.

மிதுன - புதன்

வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம் லாபாதிபதியானவர் புதன். மறைத்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும் என்பதால் பொருளாதார பற்றாக்குறை அகலும் புதிய பாதை புலப்படும்.

ஒரு சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த மங்கல நிகழ்ச்சிகள், இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மாற்றப்பட்ட பொறுப்புகள் நல்ல பொறுப்பாக அமையும்.

உத்தியோகத்தில் புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும் 'அயல்நாடு சென்று பணிபுரிய வேண் டும்' என்று விரும்பியவர்களுக்கு இப்பொழுது எடுக்கும் முயற்சி கைகூடும். பெருமாள், லட்சுமி வழிபாடு மேலும் பெருமை சேர்க்கும்.

கடக - சுக்ரன்

வைகாசி 26-ந் தேதி (9.6.2926) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சப்தமாதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தாலத்தில் சஞ்சரிக்கும் பொழுது நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொட்டது துலங்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர் கைகொடுத்து உதவுவர். என்றைக்கோ வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபம் தரும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமை பொறுப்பு கள் வந்துசேரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்க ளுக்கு மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ மாணலிகளுக்கு விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

இம்மாதம் கலைவாணி வழிபாடு காரிய வெற்றிக்கு வித்திடும். மகிழ்ச்சி தரும் வண்ணம். ஆவந்தா நீலம்.