மீன ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கிறார்.
எனவே மாதத் தொடக்கத்தில் ஆரோக்கியத் தொல்லை, அதிக விரயங்கள். தொழியில் குறுக்கீடுகள் போன்றவை ஏற்படலாம். எனினும் மே 26-ல் குரு கடக ராசிக்கு செல்லும்போது, அவரது பார்வை உங்கள் ராசியின் மீது பதிவதால் மாதத்தின் பிற்பாதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மன நிம்மதி கிடைக்கும். எதை எந்த நேரம் செய்ய நினைத்தாலும் பொருளாதாரம் கைகொடுக்கும். புதிய வாய்ப்புகள் வருவதை ஏற்றுக்கொள்வீர்கள்.
மிதுன - சுக்ரன்
வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அச்சுறுத்தல்கள் ஏற்படும்.
நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. ஒருசிலரை நம்பி செய்த காரியங்கள் நடைபெறாமல் போகலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கியும் திருப்தி ஏற்படாது.
வியாபாரத்தில் பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு குறையும். பணப் பற்றாக்குறையின் காரணமாக பிறரிடம் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாரும்.
மிதுன - புதன்
வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன்.
அவர் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஓரளவு நன்மைகள் கிடைக்கும். இடம், வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும்.
கட்டிய வீட்டை பழுது பார்க்கும் யோகமும் உண்டு. தொழிலை விரிவுசெய்ய எடுத்த முயற்சியில் தடைகள் வரலாம். தற்காலிக பணியில் இருப்பவர்கள் நிரந்தர பணியில் அமரும் வாய்ப்பு உண்டு.
கடக - சுக்ரன்
வைகாசி 26-ந் தேதி (9.6.2006) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அஷ்டமாதிபதி 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது. பிள்ளைகளால் தொல்லைகளும், பிரச்சினைகளும் ஏற்படும் ஒருசிலருக்கு பூர்வீக இடத்தையோ, வாங்கிய இடத்தையோ விற்கும் சூழ்நிலை உருவாகலாம். வேலைப்பளு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி காரணமாக அதிலிருந்து விலகிக் கொள்ளலாமா என்று நினைப்பீர்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடப்பது சந்தேகம்தான். வழிபாடு வளர்ச்சியை கூட்டும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நெருங்கிய பிரமுகர்களின் நட்பால் நன்மை கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு இடம், பூமி சேர்க்கை உண்டு போதுமான வருமானம் கிடைக்கும்.
இம்மாதம் முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றம் வழங்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்: பொன்னிற மஞ்சள்.