மகர ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனி விலகிவிட்டது.
எனவே இம்மாதம் பொருளாதார நிலை திருப்தி தரும் புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். வரன்கள் வாசல் தேடி வரும்.
அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு மக்கட்செல்வாக்கு அதிகரிக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு, குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் மாதத்தின் பிற்பகுதி வளர்ச்சி கூடும். வருமானம் அதிகரிக்கும்.
மிதுன - சுக்ரன்
வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 10-க்கு அதிபதி 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்நேரத்தில் தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
குறிப்பாக பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் ஒருவருக்கு மேல் சம்பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இருந்த தடை அகலும்.
மிதுன - புதன்
வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6. 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி 6-ம் இடத்திலேயே சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் எதிரிகளின் பலம் குறையும் லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனங்கண்டு கொள்வீர்கள்.
தொழிலில் உள்ள பணியாளர்களை திடீரென மாற்றும் சூழ்நிலை உருவாகும். உடல்தலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. கை வலி, கால் வலி ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உருவாகும். உத்தியோகத்தில் உங்களுக்கு ஒத்துழைப்பு தராத மேலதிகாரிகள் திடீரென மாற்றப்படலாம்.
கடக - சுக்ரன்
வைகாசி 26-ந் தேதி (9.6.2006) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு குருவும், சுக்ரனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். சகாய ஸ்தானாதிபதி குருவும், தொழில் ஸ்தானாதிபதி சுக்ரனும் இணைந்து சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் பல நல்ல மாற்றங்கள் இல்லம் தேடி வரும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபம் கைகளில் புரளும். புகழ் பெற்ற ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வருவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் கைகூடி வரும். மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகரிக்கும். பெண்களுக்கு தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் சூழ்நிலை உண்டு. வருமாளம் உயரும்.
இம்மாதம் வராஹி வழிபாடு வளர்ச்சியை கூட்டும். மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.