ராசிபலன்

கன்னி- 2026 வைகாசி மாத ராசிபலன்

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், விரயாதிபதி சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். 10-ல் குரு சஞ்சரிப்பதோடு, தற்சமயம் கண்டகச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுகிறது.

எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் மாற்றங்களும், மனக்கலக்கங்களும் ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படலாம். குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திற்கு வரும் வரை, பொறுமையாகச் செயல்படுவது நல்லது.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பொருளாதாரத்தில் திருப்தி ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மிதுன - சுக்ரன்

வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன்.

பாக்கிய ஸ்தானத்திற்கும், தன ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்ரன், தொழில் ஸ்தானத்திற்கு வரும்பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும், கொடுத்த வாக்கைக்காப்பாற்றுவீர்கள்.

தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல வாய்ப்புகள் வரலாம்.

மிதுன - புதன்

வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று புதன், தனது சொந்த வீடான மிதுன ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிநாதனும் புதன் என்பதால் இக்காலம் ஒரு இனிமையான காலமாக அமையும்.

புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். முக்கியமான நபர்கள், உங்களின் கூட்டாளியாக மாறுவர். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முயற்சிப்பீர்கள்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். உங்கள் பெயரிலோ, உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரிலோ சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

கடக - சுக்ரன்

வைகாசி 26-த் தேதி (9.6.2026) அன்று கடக ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2. 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் குருவோடு இணைந்து இருப்பதால் திடீர் மாற்றங்கள் வந்துசேரும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகள் ஆச்சரியம் தருவதாக அமையும். வியாபாரத்தில், பிரபலமானவர்கள் சிலர் வாடிக்கையாளர்களாக மாறுவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சில சலுகைகளைப் பெறுவீர்கள்.

பொதுவாழ்வில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முதல்பாதி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். மாணவ -மாணவிகளுக்கு படிப்பில் கவனச் சிதறல் ஏற்படலாம். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். சுபவிரயம் உண்டு.

இம்மாதம் சனீஸ்வரர் வழிபாடு சந்தோஷம் வழங்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.