ராசிபலன்

தனுசு- 2026 வைகாசி மாத ராசிபலன்

உங்கள் ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

தனுசு ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகிறது.

எனவே மாதத் தொடக்கம் மகிழ்ச்சியாகவே இருக்கும். ஆயினும் மே 25-ந் தேதி கடக ராசிக்கு குரு பகவான் வரப்போகிறார். எனவே அஷ்டமத்தில் குரு அடியெடுத்து வைக்கப்போவதால் ஆரோக்கிய தொல்லை, மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். விரயங்கள் கூடும்.

நட்பு பகையாகும். உறவினர்கள் மூலம் மன வருத்தம் தரும் தகவல் வரலாம், மாதத்தின் பிற்பாதியில் கவனமாக செயல்படுவது நல்லது. வியாழக்கிழமைதோறும் விரதம் இருந்து குரு பகவானை தொடர்ந்து வழிபட்டு வருவது நன்மை தரும்.

மிதுன - சுக்ரன்

வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம், அங்குள்ள குருவோடு இணைந்து சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும்.

பக்கத்தில் உள்ளவர்கள் பகையாளர், சிக்கல்களும், சோதனைகளும் வரக்கூடிய நேரமிது. எதையும் சிந்தித்து செய்வது நல்லது. சுயஜாதக அடிப்படையில் திசாபுத்தி பலம் அறிந்து தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் ஓரளவேனும் நன்மைகள் காண இயலும். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம்.

மிதுன - புதன்

வைகாரி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்நேரம் மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பயணங்கள் பலன் தரும்.

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும் வீட்டிற்குத் தேவையான விலை உயர்த்த மின்சாதனப் பொருட்கள் வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலில் பழைய பங்குதாரர்களை நீக்கிவிட்டு, புதிய பங்குதாரர்கள் வந்து இணையும் வாய்ப்பு உண்டு.

கடகம் - சுக்ரன்

வைகாசி 26-ந் தேதி (9.6.2036) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரன், அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கும் இந்நேரம் அற்புதமான நேரமாகும். திட்டமிடாமலேயே சில காரியங்கள் வெற்றி பெறும். சேமிப்பு அதிகரிக்கும்.

நினைத்தது நிறைவேறுவதில் எந்த தடையும் இருக்காது. பொருளாதார பற்றாக்குறை அகலும், அரசுவழி வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. கலைஞர்களுக்கு எதிலும் தேக்க நிலை ஏற்படும். மாணவ மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். புதிய முயற்சிகளில் தாம தம் நிலவும்.

இம்மாதம் ஆதியந்த பிரபு வழிபாடு ஆனந்தம் வழங்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிபச்சை.