ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 30.04.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி செய்திகள் வீடு தேடி வரும்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரும் நாள். திறமைகள் பளிச்சிடும். திடீர் தனவரவு உண்டு. தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும்.

ரிஷபம்

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

மிதுனம்

பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

கடகம்

பொருளாதார நிலை உயரும் நாள். உடன்பிறப்புகளின் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் நன்மை உண்டு.

சிம்மம்

வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.

கன்னி

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

துலாம்

பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்களது செயல்பாடு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.

விருச்சிகம்

கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வர்.

தனுசு

வரவு திருப்தி தரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும்.

மகரம்

முக்கியப் புள்ளிகளின் முக்கிய ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாக முடியும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.

கும்பம்

விரயங்கள் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பற்றி விமர்ச்சிப்பதால் பிரச்சினை ஏற்படும். கோபத்தைக் கொள்வது நல்லது.

மீனம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மருத்துவச் செலவு உண்டு. சேமிப்பு கரையும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாது.