ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 7.11.2026 - இந்த ராசிக்காரர்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

முன்னேற்றம் கூடும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர் களின் ஆதரவு உண்டு. தேக நலனில் அக்கறை செலுத்த வும். சில நேரங்களில் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது.

ரிஷபம்

பிரியமானவர்களோடு ஏற்பட்ட பிரச்சினை தீரும் நாள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

மிதுனம்

நெருக்கடி நிலை அகலும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள் நல்ல தகவலைத்தருவர்.

கடகம்

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

சிம்மம்

நிம்மதி குறையும் நாள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தொல்லை உண்டு. தேகநலன் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.

கன்னி

தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபார விருத்திக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

துலாம்

எல்லோரையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எடுத்த முடிவை மாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் தொல்லை உண்டு.

விருச்சிகம்

வாயிலைத்தேடி வருமானம் வந்து சேரும் நாள். வழிபாடுகளில் மனதைச் செலுத்துவீர்கள், உத்தியோ கத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

தனுசு

எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சி கூடும். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர்.

மகரம்

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிரிந்த நண்பர்கள் இணையும் வாய்ப்பு உண்டு. கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோக முயற்சி கைகூடும்.

கும்பம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். கடன் சுமை அதிகரிக்கும். உறவினர் வழியில் மனக்கசப்பு உருவாகும். உத்தியோக முயற்சியில் தாமதம் ஏற்படும்.

மீனம்

தீட்டிய திட்டங்கள் திசைமாறிச் செல்லும் நாள். முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. மனக்கசப்பு தரும் தகவல் உண்டு.

SCROLL FOR NEXT