குறைகள் அகலும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
வளர்ச்சி கூடும் நாள். முயற்சியில் வெற்றி கிட்டும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.
தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற வழிபிறக்கும்.
யோகமான நாள். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தொலைந்த பொருள் கைக்கு வந்து சேரும். வருமானம் பெருக வழி அமைத்துக் கொள்வீர்கள்.
தனவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் தரும் சம்பவம் நடைபெறும். உத்தியோக முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
நல்லது நடக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொலைதூரத்தில் இருந்து தொழில் முன்னேற்றத்திற்கான செய்தி வரும்.
சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத் தில் நடைபெறும். உத்தியோக முயற்சி பலன் தரும்.
நேசம் அதிகரிக்க ஈசனை வழிபட வேண்டிய நாள். பாசம் மிக்கவர்கள் பகையாகலாம். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசியில் கையை விரிப்பர்.
செல்வநிலை உயரும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். பிற இனத்தாரின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் அயல்நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம்.
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். எடுத்த முயற்சி எளிதில் கைகூடும். வரன்கள் வாயில் தேடி வரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும்.
வருமானம் அதிகரிக்கும் நாள். வருங்காலத்தைப் பற்றிய பயம் அகலும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.