Rasipalan 
ராசிபலன்

Today Rasipalan | இன்றைய ராசிபலன் 14.9.2026: இந்த ராசிக்காரர்கள் எடுக்கும் முடிவு வெற்றி தரும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.

மேஷம்

ஆனந்த வாழ்வமைய ஆனைமுகனை வழிபட வேண்டிய நாள். எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பு கிட்டும்.

ரிஷபம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். வீடு சம்பந்தமாக எடுக்கும் முடிவு வெற்றி தரும்.

மிதுனம்

இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். உடன்பிறப்புகள் வழியில் உருவான மனக்கசப்புகள் மாறும்.

கடகம்

வருமான உயர்விற்கு வழிபிறக்கும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியேடுத்து வைப்பீர்கள். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

சிம்மம்

கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு இனிய பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.

கன்னி

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். ஆதாயமில்லாத உண்டு. குடும்ப விஷயங்களை முன்றாம் நபரிடம் கொள்ள வேண்டாம்.

துலாம்

இடமாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவ இல்லத்தில் நடபெறும். வருமோ, வராதோ என்று நினைத்த பணவரவொன்று கைக்குக் கிடைக்கலாம்.

விருச்சகம்

வெற்றிகள் குவிய விநயரகை வழிபட வேண்டிய நாள். கண்ணியமிக்கவர்கள் கைக்கொடுத்து உதவுவர். தொழிலில் புதிய பணியாளர்கள் வந்திணைவர்.

தனுசு

திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

மகரம்

அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும்.

கும்பம்

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பஞ்சாயத்துகளில் நல்ல முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

மீனம்

யோசித்துப் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் உருவாகும். ஆரோக்கியத்தில் அச்சறுத்தல்கள் ஏற்படும். வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

SCROLL FOR NEXT