ராசிபலன் 
ராசிபலன்

Today Rasipalan | இன்றைய ராசிபலன் 29.3.2026: இவர்களுக்கு வரவும், செலவும் சமமாகும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.

மேஷம்

வரவும், செலவும் சமமாகும் நாள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீடு வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

ரிஷபம்

தொழில் வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். மாற்று இனத்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். பழைய கடனை அடைத்து மகிழ்வீர்கள்.

மிதுனம்

இல்லாதவர்களுக்கு உதவி செய்து உள்ளம் மகிழும் நாள். வாகனப் பராமரிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். பெற்றோர்களின் உடல் நலனில் கவனம் தேவை.

கடகம்

ஆர்வம் காட்டாத செயல்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். விவாகப் பேச்சு நல்ல முடிவிற்கு வரும். அயல்நாட்டு நிறுவனங்களில் பணிபுரிவது பற்றி சிந்திப்பீர்கள்.

சிம்மம்

மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும் நாள். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

கன்னி

ஆதாயம் கிடைக்க அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள்.

துலாம்

பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். பாதியில் நின்ற பணி தொடரும். வரவு போதுமானதாக இருக்கும்.

விருச்சகம்

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். முக்கிய புள்ளிகள் தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டுவர்.

தனுசு

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மருத்துவச் செலவு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

மகரம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவைவிட செலவு கூடும். புதியவர்களை நம்பி செயல்படுவதால் பிரச்சனைகள் உருவாகும்.

கும்பம்

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இளைய சகோதரத்தின் வழியில் இணக்கம் ஏற்படும். உத்தியோக உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

மீனம்

எதிரிகள் உதிரியாகும் நாள். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர். மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வந்து சேரலாம்.