ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 8.4.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தேவைகள் பூர்த்தியாகும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாது.

மிதுனம்

புதிய பாதை புலப்படும் நாள். பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார விருத்தி அதிகரிக்கும். குதூகலப் பயணங்கள் உண்டு.

கடகம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

சிம்மம்

சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். இடம் வாங்கும் யோகம் உண்டு.

கன்னி

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். புது முயற்சிகளில் வெற்றி உண்டு. தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பணிபுரிவீர்கள்.

துலாம்

உறவினர்களின் உதவி கிடைக்கும் நாள். சில தினங்களுக்கு முன்பு எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் அகலும்.

விருச்சிகம்

செல்வ நிலை உயரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு

நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்திலுள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

மகரம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். அலுவலகப் பணியில் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். பணம் வந்த சில நிமிடங்களிலேயே செலவாகும்.

கும்பம்

யோகமான நாள். ஆன்மிக பயணங்களில் ஆர்வம் கூடும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். திருமண பேச்சுகள் முடிவாகும். பயணம் பலன் தரும்.

மீனம்

புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். கட்டிடப்பணிகளை தொடருவது பற்றி சிந்திப்பீர்கள்.