சொத்துகளால் லாபம் கிட்டும் நாள், பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் அகலும். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள்.
சச்சரவுகளைச் சமாளிக்கும் நாள். அரசுவழிச் சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சினைகள் உண்டு.
யோகமான நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. குடும்பத்தினர் உங்கள் சுருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பர்.
விரயங்கள் கூடும் நாள். கடன் பிரச்சினையைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி, நிரந்தரப் பணியாகலாம்.
எடுத்த காரியத்தில் வெற்றி காணும் நாள். இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். தொழில் முன்னேற்றம் உண்டு.
உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
கட்டுப்பாடோடு செயல்பட வேண்டிய நாள். தன்னிச்சையாக எதையும் செய்ய இயலாது. விரயங்கள் உண்டு, வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
குடும்பச்சுமை கூடும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அலைபேசி வழித் தகவல் ஆச்சரியப்படுத்தும். வீடு, இடம் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும்.
எடுத்த முயற்சி கைகூடும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளைப் பிறரிடம் கொடுக்க வேண்டாம்.
சந்தோஷமான தகவல் வந்து சேரும் நாள். கருத்து வேறுபாடுகள் அகலும், உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். ஆன்மிகப் பயணம் உண்டு.
தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள். உத்தியோகத்தில் உங்கள் கை ஒங்கும். புதிய வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.