ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 1.10.2026 - இந்த ராசிக்காரர்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய செய்தி கிடைக்கும் நாள். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொருளாதார நிலை உயரும். அன்பு நண்பர்கள் ஆதரவு தருவர்.

ரிஷபம்

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மிதுனம்

இடம், வாங்கும் முயற்சி கைகூடும் நாள். புதிய கூட்டாளிகளால் பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இனிமை தரும் விதம் இடமாற்றம் அமையும்.

கடகம்

எதிரிகள் விலகும் நாள். எதிர்பாராத தொகை இல்லம் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித்தகவல் உறுதுணைபுரியும்.

சிம்மம்

சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

கன்னி

தைரியத்தோடும், தன்னம்பிகையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

துலாம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைவிடச் செலவு கூடும். பிறருக்கு பொறுப்புச் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது.

விருச்சிகம்

பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். புகழ்மிக்கவர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவுவர். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். வரன்கள் முடிவாகும்.

தனுசு

தேடிய வேலை திடீரெனக் கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். தனவரவு திருப்தி தரும்.

மகரம்

விரயங்கள் கூடும் நாள். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. பணவரவு தாமதப்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

கும்பம்

அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். பொருளாதார நிலை உயரும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மீனம்

உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். தொழிலில் பங்குதாரர்கள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர். வி.ஐ.பி.க்களின் சந்திப்பால் விருப்பம் நிறைவேறும்.

SCROLL FOR NEXT