யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வரன்கள் வாயில் தேடிவரும்.
மனக்கசப்புகள் மாறும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வியாபாரத்தில் இழந்த லாபத்தை பெறுவீர்கள். உத்தியோக முயற்சி வெற்றி பெறும்.
நல்ல சம்பவம் நடைபெறும் நாள். செலவிற்கேற்ற வரவு உண்டு. உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
குறை சொல்லியவர்கள் பாராட்டும் நாள். வாகன பராமரிப்பு செலவு உண்டு. பழைய பிரச்சினைகளை தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.
கனவுகள் நனவாகும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். பேச்சுத்திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள்.
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.
பாதியில் நின்ற பணி மீதியும் முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள் திருமண முயற்சி கைகூடும்.
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டு ஆச்சரியப்படுவர்.
மனக்குழப்பம் ஏற்படும் நாள். குடும்பச்சுமை கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உடல்நலத்திற்காக செலவிடுவீர்கள்.
திட்டமிட்ட காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நாள். உள்ளத்தில் அமைதி கூடும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.