ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 4.4.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

மகிழ்ச்சி கூடும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

ரிஷபம்

திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும் நாள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்காது. மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும்.

மிதுனம்

முன்னேற்றம் தரும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.

கடகம்

உற்சாகத்துடன் செயல்படும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

சிம்மம்

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

கன்னி

போன் மூலம் பொன்னான தகவல் கிடைக்கும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்

அலைபேசி மூலம் வரும் தகவல் ஆதாயம் தரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் வழிகாட்டுவர். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

விருச்சிகம்

வி.ஐ.பி.க்களை சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்

வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறதியால் விட்டுப்போன பணிகளை செய்து முடிப்பீர்கள்.

கும்பம்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். உத்தியோக முயற்சி கைகூடும்.

மீனம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. அடுத்தடுத்த செலவுகளால் மனக்குழப்பம் ஏற்படலாம்.