ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 26.04.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும் நாள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் உள்ள நெளிவு சுழிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

ரிஷபம்

வளர்ச்சி கூடும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

கடன் சுமை குறையும் நாள். காலை நேரம் வரும் அலைபேசி நல்ல தகவலைத் தரும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.

கடகம்

தடைகள் அகலும் நாள். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தேக ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

சிம்மம்

பணிகளை விரைந்து முடிக்கும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உதவி செய்வர். கவுரவம், அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும்.

கன்னி

நண்பர்களின் சந்திப்பால் நலம் கிடைக்கும் நாள். கூட்டு முயற்சி வெற்றி பெறும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்

தேவைகள் பூர்த்தியாகும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்

உற்சாகத்துடன் செயல்படும் நாள். உடல்நலம் சீராகும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு.

தனுசு

இடமாற்றங்களால் இனிய மாற்றங்கள் ஏற்படும் நாள். பழகிய சிலருக்காக பணத்தை செலவிடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.

மகரம்

வளர்ச்சிகூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். நண்பர்களால் விரயம் உண்டு. கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது.

கும்பம்

யோகமான நாள். எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். விவாக பேச்சுகள் முடிவாகும்.

மீனம்

முயற்சி வெற்றி தரும் நாள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். சொத்துகளில் முறையாக லாபம் கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.