பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.
இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
வழக்குகள் சாதகமாக முடியும் நாள். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தொழிலில் லாபம் உண்டு.
விடியும்பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.
யோகமான நாள். தூர தேசத்திலிருந்து வரும் தகவல் அனுகூலம் தரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு திருப்தி தரும்.
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.
வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
புதிய பாதை புலப்படும் நாள். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக செலவிடுவீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.
வரவைவிட செலவு கூடும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும்.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். ஆரோக்கியத்திற்காக செலவிடுவீர்கள்.
உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்துமுடிப்பீர்கள்.
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள், விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும், தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.