ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 21.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு கடன் சுமை குறையும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

பிரச்சினைகள் தீரும் நாள், பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமை வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபார வளர்ச்சியுண்டு.

ரிஷபம்

சந்தோஷங்களை சந்திக்கும் நாள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேருவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

மிதுனம்

சொந்த பந்தங்களின் சந்திப்பால் மனநிறைவு கூடும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

கடகம்

பணவரவு திருப்தி தரும் நாள், பணியாளர் தொல்லை அகலும், வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

சிம்மம்

சங்கடங்களை சமாளிக்கும் நாள். திட்டமிட்ட வேலைகளை மாற்றியமைக்க நேரிடலாம். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

கன்னி

அலுவலக பிரச்சினைகள் அகலும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வரவு திருப்தி தரும்.

துலாம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவ மாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

விருச்சிகம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள், வி.ஐ.பி.க் களின் சந்திப்பு உண்டு.

தனுசு

யோசித்து செயல்பட வேண்டிய நான். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உறவினர் பகை உருவாகும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

மகரம்

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவர்.

கும்பம்

உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரியும் நாள், அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும், கடன் சுமை குறையும்.

மீனம்

எதிரிகள் விலகும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவர். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.