ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 18.05.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். குழப்பங்கள் அகலும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பணம் தரவேண்டியவர்கள் வீடு தேடிவந்து தருவர். தேக ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.

மிதுனம்

வளர்ச்சி கூடும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். சிக்கலான சில காரியங்களைக் கூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

கடகம்

வரவை விடச் செலவு கூடும் நாள். வரன்கள் வந்து வாயிற் கதவைத் தட்டும். தூரதேசத்திலிருந்து அழைப்பு வரலாம். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

சிம்மம்

நேற்றைய பிரச்சனை முடிவிற்கு வரும் நாள். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். வரவு திருப்தி தரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

கன்னி

நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

துலாம்

வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திடீர் விரயம் உண்டு. யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. மறதியால் தொல்லைகளுக்கு ஆட்பட நேரிடும்.

விருச்சிகம்

தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

தனுசு

புதிய பாதை புலப்படும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். செய்தொழிலில் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சக பணியளார்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். கரைந்த சேமிப்பை ஈடுகட்டுவீர்கள். தொழிலில் புதியவர்களை பங்குதாரர்களாக்க முயற்சிப்பீர்கள்.

கும்பம்

சிக்கனத்தைக் கையாள்வீர்கள். பணியாளர்கள் தொல்லை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன் வருவீர்கள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

மீனம்

அதிர்ஷ்டமான நாள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.