நட்பால் நன்மை ஏற்படும் நாள். தொழில் சம்பந்தமாக தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். விவாக பேச்சுகள் முடிவாகும். வாகன யோகம் உண்டு.
தெய்வ நம்பிக்கை கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வர்.
யோகமான நாள். வரன்கள் வாயில் தேடி வரும். சில பிரச்சனைகளை கண்டும் காணாமலும் இருப்பது நல்லது. தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
வருமானம் உயரும் நாள். முக்கிய புள்ளிகள் இல்லம் தேடி வருவர். உறவில் ஏற்பட்ட பகை மாறும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்திகளை தருவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. வருமானம் இருமடங்காகும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் வழிகாட்டுவர்.
தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும் நாள். பாக்கிகள் வசூலாகும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வரும்.
பிரச்சனைகளிலிருந்து விடுபடும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். ஆரோக்கியத்தொல்லை உண்டு. உறவினர்களால் மனக்கலக்கம் உருவாகும். எதிர்பாராத விரயம் உண்டு.
யோகமான நாள். இல்லத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். காரிய வெற்றிக்கு அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.