ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 15.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

முயற்சியில் வெற்றி கிடைக்கும் நான். நல்ல செய்தி இல்லம் தேடி வரும். புதிய சொத்துக்களை வாங்கும் யோகமுண்டு. உத்தியோகத்தில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள்.

ரிஷபம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீண் விரோதங்களை வளர்த் துக் கொள்ள வேண்டாம். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி தாமதப்படலாம்.

மிதுனம்

நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் வளர்ச் சிக்கு நண்பர்கள் கைகொடுத் துதவுவர். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

கடகம்

வளர்ச்சி கூடும் நாள். எதிர் பார்த்த தொகை இல்லம் தேடி வரும். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர் கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம்.

சிம்மம்

மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர் கள். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் வந்து சேரும். கல்யான முயற்சி கைகூடும். தொழில் சீராக நடைபெறும்.

கன்னி

தடைகள் அதிகரிக்கும் நாள். எதிரிகளின் தொல்லை இதயத்தை வாடவைக்கும். தொழில் சம்மந்தமாக எடுத்த முடிவில் குழப்பங்கள் தோன்றும். வீண் விரயம் உண்டு.

துலாம்

நினைத்தது நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட பகை மாறும். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் கூடும்.

விருச்சிகம்

தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும். எடுத்த முயற்சிக்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஒங்கும்.

தனுசு

உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

மகரம்

ஆரோக்கியத்தில் அக்கரை காட்டுவது நல்லது. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

கும்பம்

வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்ள நேரிடலாம். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

மீனம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அந்நிய தேசப் பயணம் எண்ணியபடியே கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.