ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 14.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள், நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். வரன்கள் முடிவாகும்.

ரிஷபம்

இல்லம் தேடி நல்ல தகவல் வரலாம். செய்தொழிலில் உயர்வும் கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வர்.

மிதுனம்

உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கடகம்

முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவர்.

சிம்மம்

அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். மருத்துவச் செலவுகள் உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடம் வரலாம்.

கன்னி

எதையும் துணிந்து செய்ய இயலாது. இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படுவதற்கான 8 அறிகுறிதோன்றும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்காது.

துலாம்

பாராட்டும் புகழும் கூடும் நாள். பயணங்களால் பலன் உண்டு. வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

விருச்சிகம்

வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும், தொழில் முன்னேற்றம் உண்டு. தொகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

தனுசு

துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். உத்தி யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல நகவலை தருவர்.

மகரம்

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். எதிலும் நிதானம் தேவை. வரவை விடச் செலவு கூடும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

கும்பம்

நண்பர்கள் நல்ல தகவலைத் தரும் நாள், வருமானம் உயரும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.

மீனம்

முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் நாள், மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர், கூட்டு முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள்.